அண்மைய செய்திகள்

recent
-

எரிவாயு சிலிண்டர்கள் ரூ. 2500 முதல் 3500 வரை விற்பனை; பாரிய சிரமத்தில் நுகர்வோர்

சமையல் எரிவாயு கூடுதல் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்பொழுது சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் நுகர்வோர் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது. லிட்ரோ எரிவாயு அடங்கிய கொள்கலன் கப்பல் ஒன்று நாட்டை வந்த டைந்துள்ளதாகவும், விரைவில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலை நீங்கும் எனவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் தேஷர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 நாளாந்தம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறைந்த விலைக்கு எரிவாயு விற்பனை செய்யக்கூடிய சாத்தியங்கள் இருந்தும் நிதி அமைச்சின் தலையீட்டுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை யினால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் நலின் சமந்த தெரிவித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எடையுடைய எரிவாயு 600 டொலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஓமான் டிரேடின் என் னும் நிறுவனத்திடம் கையொப்பம் செய்துகொண்டமையால் 800 டொலருக்கு கொள்வனவு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களைப் பராமரிப்பதி லும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் உணவு சமைக்க முடியாமையால் நேற்று பிற்பகல் சில ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் ரூ. 2500 முதல் 3500 வரை விற்பனை; பாரிய சிரமத்தில் நுகர்வோர் Reviewed by Author on November 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.