கொம்பனி வீதியில் 5 நிமிடத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிலையம் சிஐடியால் முற்றுகை
மேலும் காலாவதியான 41 சாரதி அனுமதிப்பத்திரங்களும் இங்கு மறு பதிப்பு செய்யப்பட்டுள்ளன.
மோசடிக்காரர்கள் போலி சாரதி அனுமதிப்பத்திரத்தில் அசல் சாரதி அனுமதிப்பத்திம் போல் சிப் அச்சிட்டுள் ளனர். இவற்றுக்குத் தேவையான பிரத்யேக ஸ்டிக்கர்கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வாகனம் ஓட்டும் பயிற்சி இல்லாதவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாத வர்களுக்கும் கூட இந்த இடத்தில் நீண்ட காலமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஐந்து நிமிடங்களுக்குள் தரகர்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொம்பனி வீதியில் 5 நிமிடத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிலையம் சிஐடியால் முற்றுகை
Reviewed by Author
on
November 18, 2021
Rating:
No comments:
Post a Comment