மன்னாரில் விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள் வழங்கி வைப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கமநல அபிவிருத்தித் தினைக்களத்தில் வைத்து விவசாயிகளின் விவசாய ஊக்குவிப்பை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உளுந்து மற்றும் பயறு செய்கைக்கான விதையினங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், பிரதேச செயலாளர்கள், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. சகீலா பானு, உதவி கமநல சேவை ஆணையாளர் மெரீன் குமார் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான விதைகள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
November 01, 2021
Rating:
Reviewed by Author
on
November 01, 2021
Rating:

No comments:
Post a Comment