அண்மைய செய்திகள்

recent
-

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன- நுகர்வோர்

இலங்கையில் காய்கறிகள், மசாலாப் பொருட்கள், கருவாடு, பழங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட அன்றாட உபயோகப் பொருட்களின் விலைகள் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ பாகற்காய் 400 ரூபாவுக்கும் லீக்ஸ், கரட், புடலங்காய் மற்றும் போஞ்சி ஒரு கிலோ 320 ரூபாவுக்கும், ஒரு கிலோ வட்டு கத்திரிக்காய்(தலன பட்டு) 280 ரூபாவுக்கும் , ஒரு கிலோ கோவா 240 ரூபாவுக்கும், ஒரு கிலோ பீற்றூட் 200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. 

ஒரு கிலோ தேசிக்காய் 800 ரூபா , ஒரு கிலோ பச்சை மிளகாய் 500 ரூபா , ஒரு கிலோ தக்காளி 650- 700 ரூபா, ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதென நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ தேசிக்காயின் விலை 700 ரூபாவால் அதிகரித்துள்ளமையால் மக்கள் கொள்வனவு செய்யாமையால் தாம் நஷ்டம் அடைய வேண்டி யுள்ளது என சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கிராம் தக்காளி 200 ரூபாவில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 600 ரூபா வரை அதிகரித்துள்ளமையால் மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்யாமையால் , சில்லறை வியாபாரிகள் சிரமத்திற்குள்ளா கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

100 கிராம் மிளகாய்த் தூள் 102 ரூபா வரையிலும், 100 கிராம் மிளகுத் தூள் 220 ரூபா வரையிலும், 100 கிராம் மசாலா தூள் 105 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது. இலங்கையில் அதிகமாக உணவுக்காகப் பெற்றுக் கொள்ளப்படும் நெத்தலி, கருவாடு விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ஒரு கிலோ கிராம் சுப்பிரி நெத்தலியின் விலை 1500 - 600 ரூபா வரை விலை அதிகரித்துள்ளது.

 இரண்டாம் நிலை இலங்கை நெத்தலி ஒரு கிலோ கிராம் 1200 - 1300 ரூபா வரை அதிகரித்துள்ளது. கருவாடு ஒரு கிலோ கிராமின் விலை 1000 -1500 ரூபா வரை அதிகரித்துள்ளது. வாழை, அப்பிள், திராட்சை, பப்பாளி போன்ற பழங்களின் விலைகளும் பாரிய அளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன- நுகர்வோர் Reviewed by Author on November 12, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.