அண்மைய செய்திகள்

recent
-

தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களது 67 வது பிறந்த தினம்

தமிழீழ தேசிய தலைவராக போற்றப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களது 67 வது பிறந்த தினம்  இன்று.1954 நவம்பர் 26-ம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் இவர் பிறந்தார். 

 வேலுபிள்ளை பிரபாகரன். இந்தப் பெயரை உச்சரிக்காத தமிழர்களே இல்லை என சொல்லலாம். இலங்கையில் தமிழீழம் மலர ஆயுதமேந்தி போராட்டம் நடத்தியவர். தமது 13-ஆவது வயதில் தந்தை வேலுபிள்ளையுடன் பிரபாகரன் நடந்து செல்லும்போது, முதியவர் ஒருவரை இலங்கை ராணுவத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வை பார்த்த பிறகே, தமிழீழத்துக்காக போராட வேண்டும் என்ற மன உறுதி பிரபாகரனுக்கு ஏற்பட்டது. அப்போதே, தமிழ் இனத்தை காரணம் காட்டி தாக்குபவர்களை, தாம் திருப்பி தாக்கப் போவதாக கூறியிருக்கிறார் பிரபாகரன். ஆனால், அப்போது அதனை பிரபாகரனின் தந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தந்தையிடம் சொன்ன வார்த்தையை 21 வயதில் நிறைவேற்றினார் பிரபாகரன். ஆம், இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், இனவெறி காரணமாக தமிழர்களை காரணமின்றி சுட்டு வீழ்த்தியது இலங்கை அரசு. அதற்கு உறுதுணையாக இருந்த மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டுக்கொன்று தமது சுதந்திர வேட்கைப்போரை தொடங்கினார் பிரபாகரன். அப்போது அவர் எமது மக்களின் விடுதலைக்காக போராட செல்கிறேன். இனிமேல், வீட்டிற்கு திரும்பிவர மாட்டேன் என தமது பாதையை வகுத்துக்கொண்டார்.

 அவரை பலரும் மாவீரன் என்றே அழைத்தனர். ஆனால் அதனை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. தன்னை ஒரு மாவீரனாக அழைப்பதை பிரபாகரன் விரும்பாவிட்டாலும், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் அவர் மாவீரனாகவே நிறைந்திருக்கிறார்.

தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களது 67 வது பிறந்த தினம் Reviewed by Author on November 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.