மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!
இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேற்று தொடக்கம் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து செய்வதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
அத்துடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதுடன் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!
Reviewed by Author
on
November 26, 2021
Rating:
No comments:
Post a Comment