கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் பலி
கொழும்பு கோட்டை பரோன் ஜயதிலக மாவத்தையில் உள்ள கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து விழுந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டிடத்தை சீர் செய்து கொண்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று (27) காலை கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடற்படை பொறியாளர்களால் குறித்த கட்டிடத்தின் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பதுளை கந்தகெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய கடற்படை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் பலி
Reviewed by Author
on
November 27, 2021
Rating:
No comments:
Post a Comment