யாழில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரிப்பு: அரச அதிபர்
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித் துள்ளதாக யாழ்.மாவட்ட அர சாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அண் மையில் சடுதியாகக் குறைந் திருந்த நிலையில் நேற்று முன் தினம் 43 பேர் தொற்றாளர்க ளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
ஏனைய மாவட்டங்களைப் போல யாழ்.மாவட்டத்திலும் மீண்டும் கொரோனா நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும், பொது மக்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுவதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றார்.
யாழில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரிப்பு: அரச அதிபர்
Reviewed by Author
on
November 11, 2021
Rating:
No comments:
Post a Comment