அண்மைய செய்திகள்

recent
-

வெலிசர விபத்து - காயமடைந்த மாணவனும் உயிரிழப்பு

கடந்த 4 ஆம் திகதி வெலிசர, மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளான். 17 வயதுடைய இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 16 வயதுடைய சிறுவன் ஒருவனால் செலுத்தப்பட்ட சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று வெலிசர பிரதேசத்தில் மேலும் சில வாகனங்களுடன் மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டிருந்தது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மாணவனின் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். 

 52 வயதுடைய அவர் முன்னாள் இராணுவ சிப்பாயாகும். விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மாணவன் மற்றும் அவரின் தந்தை ஆகியோர் வத்தளை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹாபாகே பிரதேசத்தை சேர்ந்த தங்க ஆபரண வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான சொகுசு கார் அவரின் மகனால் செலுத்திச் செல்லப்பட்டுள்ள் நிலையில் மகன் வாகனத்தை எடுத்து வந்தது தனக்கு தெரியாது என சம்பவ இடத்திற்கு வந்த தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெலிசர விபத்து - காயமடைந்த மாணவனும் உயிரிழப்பு Reviewed by Author on November 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.