அண்மைய செய்திகள்

recent
-

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பொலிஸார்

குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பணப் பரிவர்த்தனையின் போது போலியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது குறித்து அவதானமாக இருக்குமாறு கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். இந்த பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் பல்வேறு தேவைகளுக்காக குறிப்பாக பொருட் கொள்வனவிற்காக அடிக்கடி நகரைச் சுற்றி வருவதாகவும், இதுபோன்ற பரிவர்த்தனைகளில் பணம் செலுத்துவதற்கு பெரும்பாலும் போலியான நாணயத்தாள்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த பண்டிகைக் காலத்தில் போலி நாணயத் தாள்களை மாற்றுவதற்கு உரிய நபர்கள் பல்வேறு மோசடி யுக்திகளை கையாண்டு வருக்கின்றமை தெரியவந்துள்ளது. கடந்த வாரம் கிருலப்பனை, பாதுக்க, களுத்துறை மற்றும் ரங்கல ஆகிய பகுதிகளில் ரூ. 5,000 மற்றும் ரூ. 1,000.போலி நாணயத்தாள்கள் அச்சிடும் பல இடங்களை பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் கணனிகள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

எனவே, பணப் பரிவர்த்தனையின் போது பொது மக்கள் நோட்டின் செல்லுபடித்தன்மை, பாதுகாப்பு நூல், நோட்டின் நிறம் ஆகியவற்றைக் கண்டறிய விசேட கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற போலி நாணயத்தாள்களை மாற்ற முயன்றால், மோசடி நபர்கள் தொடர்பில் சந்தேகம் இருந்தால், 119 பொலிஸ் அவசரகாலப் பிரிவு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு ம் பொது மக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பொலிஸார் Reviewed by Author on December 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.