மன்னார் கோந்தைப்பிட்டி கடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளனர்
படகில் இருந்த ஒருவர் மட்டுமே பள்ளிமுனை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்
கடல் இழுத்துச் சென்றவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சம்பவத்தில் காணாமல் போனவர்கள் பருத்தித்துறையை சேர்ந்த தர்சன் மற்றும் செந்தூரன் எனவும் உயிர் தப்பியவர் ஜெரோம் என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த பள்ளிமுனை கடல் பகுதியில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட ஆற்று நீரோட்டங்கள் இருப்பதாகவும் இதில் ஏதாவது ஒரு நீரோட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று மன்னார் கடற்தொழில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுவரை காணாமல் போன இருவரும் மீட்கப்படவில்லை.
மன்னார் கோந்தைப்பிட்டி கடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் காணாமல் போயுள்ளனர்
Reviewed by Author
on
December 13, 2021
Rating:
No comments:
Post a Comment