சீனாவில் கேஸ் கசிந்து வெடி விபத்து - அரசுக் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி
அப்போது அங்கு திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
கேஸ் கசிந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த வெடிவிபத்தில் அரசு கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளில் ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் மீட்புப“ பணி நடந்தது.
இந்த விபத்தில் 16 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறும் போது, ‘வெடி விபத்தில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நள்ளிரவில் மீட்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளன.
சீனாவில் கேஸ் கசிந்து வெடி விபத்து - அரசுக் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி
Reviewed by Author
on
January 08, 2022
Rating:
No comments:
Post a Comment