அண்மைய செய்திகள்

recent
-

தலவாக்கலை – மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து 3 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கந்தையா ரமணி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நீர்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

இதனையடுத்து, சம்பவ ஸ்தலத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நீர்தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தலவாக்கலை – மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து 3 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு! Reviewed by Author on January 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.