அண்மைய செய்திகள்

recent
-

புத்தாண்டு தினத்தில் 18 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினமான நேற்று (01) நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 18 பேர் உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 8 பேர் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 ஏனைய 10 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துகளில் மரணம் 

 வவுனியா: யாழ்ப்பாணம் - கண்டி (A9) வீதியில் முச்சக்கர வண்டி - கெப் விபத்து - தோணிக்கல்லைச் சேர்ந்த 35 வயது முச்சக்கரண வண்டி சாரதி மரணம் 

நீர்கொழும்பு: நிகலஸ் மாகஸ் வீதியில், முச்சக்கர வண்டி - சைக்கிளில் மோதி விபத்து - நீர்கொழும்பைச் சேர்ந்த, சைக்கிளில் சென்ற 36 வயது நபர் மரணம் 

முள்ளியாவளை: புதுக்குடியிருப்பு - கேப்பாபுலவு வீதியில், டிப்பர் - மோட்டார்சைக்கிள் விபத்து - மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில், முள்ளியாவளையைச் சேர்ந்த 48, 17 வயதுடைய இருவர் மரணம் 

பேலியகொடை, வனவாசல: கார் - புகையிரதம் விபத்து - வத்தளையைச் சேர்ந்த 55 வயது நபர் மரணம் 

ஹோமாகம, ஹைலெவல் வீதி: லொறி - மோட்டார்சைக்கிள் விபத்து - பிங்கிரியவைச் சேர்ந்த 30 வயது நபர் மரணம் 

திருகோணமலை - ஹபரண வீதி: பஸ் - கார் விபத்து - மஹரகமவைச் சேர்ந்த 27 வயது நபர் மரணம் 

பின்னவல, ஹேன்யாய - அஸ்வெத்தும: மலைப்பாங்கான பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னவலவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்து மரணம் 

ஹபராதுவ, காலி - மாத்தறை வீதி: வீதியோரமாகச் சென்ற நபரை மோதிய அடையாளம் காணப்படாத வாகனம் மோதி விபத்து - ஹபராதுவவைச் சேர்ந்த 22 வயது நபர் 

புத்தாண்டு தினத்தில் 18 பேர் உயிரிழப்பு Reviewed by Author on January 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.