மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஐந்து வாகனங்களை மோதி தள்ளிய பேருந்து
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதி ஸ்ரேடியம் சந்தி பகுதியில் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை(11) மாலை இடம் பெற்றுள்ளது பிரதேச செயலகத்திற்கு சொந்தமான வாகனம்,டிப்பர்,முச்சக்கர வண்டி,துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்சைக்காக காத்திருந்த வாகணங்களை ஆஸ்பத்திரி வீதியூடாக ஸ்ரேடியம் நோக்கி பயணித்த பேரூந்து மோதித் தள்ளியுள்ளது
குறித்த பேரூந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சமிஞ்சைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டி முற்று முழுதாக சேதமடைந்ததுடன் ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேரூந்த நிறுத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார் இதனை தொடர்ந்து மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஐந்து வாகனங்களை மோதி தள்ளிய பேருந்து
Reviewed by Author
on
January 11, 2022
Rating:
Reviewed by Author
on
January 11, 2022
Rating:

No comments:
Post a Comment