அண்மைய செய்திகள்

recent
-

மண்டையன்குழு தலைவர் சுரேஸ் 'தூள்' புகழ் அடைக்கலநாதன் இருவருமே கோதாவின் கைக்கூலிகள்: சுகாஸ் அதிரடி

தமிழ் மக்களின் உரி மைகளுக்காக சுயலாப அரசியல் மற்றும் பதவி அரசியலுக்கு அப்பால் செயற்படும் தமிழ் தேசிய மக்கள் முன்ன ணியை தமிழ் இனத்தின் மீது போர்க் குற்றம் புரிந்த கோதாபய அரசாங்கத்தின் கைக்கூ லிகள் என்று இலங்கை அரசின் கைக்கூலிகள் தெரிவித்திருப்பது வேடிக் கையானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் பேச்சாளர் சுகாஸ் தெரிவித் துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மண்டையன் குழு என்ற பெயரில் ஒரு சட்டவிரோத ஆயுதக்குழுவை தாயகத்தில் உருவாக்கி தனது சொந்த மக்களையே மண்டையில் துவக்கால் சுட்டுக் கொன்றவர்தான் சுரேஸ் பிரேமச் சந்திரன். 

 இவர் தான் கோதாவினுடைய கைக் கூலி. 1990 களில் மகிந்த ராஜபக்ச மீன்பிடி அமைச்சராக இருந்த போது மகிந்த ராஜபக்சவினது செயலாளராக இருந்தவர்தான் சுரேஸ் பிரேமச்சந்தி ரன். அவ்வாறானால் மகிந்தவினதும் கோதாவினதும் கைக்கூலி யார்? சுரேஸ் பிரேமச்சந்திரன்தான். இவரு டைய ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிதான் வவுனியாவில் உள்ளூராட்சி மன்றத் தில் பொதுஜன பெரமுன ஆட்சிய மைக்க ஆதரவு வழங்கினர். இவர்தான் இந்தியாவினதும் கோதா அரசினதும் கைக்கூலி. இவருடன் தூள் புகழ் செல்வம் அடைக்கலநாதனும் எமது கட்சிக்கெதிராக குரலெழுப்பி வரு கின்றார். இவர்களின் அநாகரீக அரசி யலுக்கு எதிராக எமது தரப்பு நியாயங் களை தெரிவிக்க முயன்றால் தாங்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித் தார்.

மண்டையன்குழு தலைவர் சுரேஸ் 'தூள்' புகழ் அடைக்கலநாதன் இருவருமே கோதாவின் கைக்கூலிகள்: சுகாஸ் அதிரடி Reviewed by Author on January 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.