தாய்மார் எம்மைத் தொடர்ந்து தண்டித்ததாலும் துரத்தியதாலும் நாம் வீட்டை விட்டு வெளியேறினோம் – கொட்டதெனியாவ சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவிப்பு
கடந்த நவம்பர் மாதம் முதல் கொட்டதெனியாவ பிரதேசத்திலிருந்து காணாமல் போயிருந்த இரு சிறுவர்கள் நேற்று மீரிகமவில் கண்டுபிடிக்கப்பட்டனர். பெண் ஒருவர் இரண்டு சிறுவர்களையும் மீரிகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 23ஆம் திகதி கொட்டதெனியாவ பிரதேசத்திலிருந்து இரண்டு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். உறவினர்களான 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டதெனியாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தாய்மார்கள் தம்மைத் தொடர்ந்து தண்டித்ததாலும் துரத்தியதாலும் தாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் பல வாரங்களாக யாசகம் பெற்றதாகவும் சிறுவர்கள் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களிலிருந்து உணவு கிடைத்தது. ஊரில் உள்ளவர்கள் இவர்களின் இருப்பிடம் குறித்து விசாரித்தபோது, பெற்றோரிடம் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தால் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
44 நாட்கள் காட்டில் மறைந்திருந்ததாகவும், உணவு தேடி ஊருக்கு வந்ததாகவும் குறித்த அச்சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்மார் எம்மைத் தொடர்ந்து தண்டித்ததாலும் துரத்தியதாலும் நாம் வீட்டை விட்டு வெளியேறினோம் – கொட்டதெனியாவ சிறுவர்கள் பொலிஸாரிடம் தெரிவிப்பு
Reviewed by Author
on
January 08, 2022
Rating:
No comments:
Post a Comment