தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் இராணுவத்தால் மீட்பு.
இதன்போது குறித்த புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பயணப் பொதி ஒன்று காணப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பயணப்பொதியில் எவரும் உரிமை கோராத நிலையில் குறித்த புகையிரதம் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தை சென்றடைந்தது.
எனினும் குறித்த பயணப் பொதிக்கு எவரும் உரிமை கோராத நிலையில் சௌத்பார் இராணுவத்தினர் அந்த பயண பொதியை சோதனை செய்தனர்.
இதன்போது குறித்த பயணப் பொதியில் இருந்து "ஐஸ்" போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 360 கிராம் எடை கொண்டது என தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக சௌத்பார் இராணுவத்தினரால் குறித்த "ஐஸ்" போதைப்பொருள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் இராணுவத்தால் மீட்பு.
Reviewed by Author
on
January 08, 2022
Rating:
No comments:
Post a Comment