மன்னார்- சிறுத்தோப்பு A-14 பிரதான வீதி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் உரிய முறையில் செயற்படுவதில்லை-மக்கள் விசனம்.
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, சிறுத்தோப்பு பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் தொடர்ச்சியாக உரிய நேரத்தில் திறக்கப்படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தாராபுரம் கிராமத்தில் இருந்து பேசாலை வரையிலான குறித்த பிரதான வீதியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையம் மாத்திரம் அமைந்துள்ளது. குறித்த எரி பொருள் நிறப்பும் நிலையத்தில் கடந்த சில வருடங்களாக எரிபொருட்கள் போதிய அளவு கையிறுப்பில் இருப்பது இல்லை எனவும், அதனை தொடர்ந்து உரிய நேரத்தில் திறக்கப்படுவது இல்லை எனவும் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Author
on
January 24, 2022
Rating:

No comments:
Post a Comment