பாக்கிஸ்தானில் கார்கள் பனிப்பொழிவில் சிக்கியதில் 21 பேர் உயிரிழப்பு
ஆகக்குறைந்தது ஆறு பேராவது காருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதை உறுதி செய்ய முடிகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன- புகையை சுவாசித்தன் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியை பேரழிவு பிரதேசமாக அறிவித்துள்ள அதிகாரிகள் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்- இராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர் என நகரில் சிக்குண்டுள்ள உஸ்மான் அபாசி என்ற சுற்றுலாப்பயணி தெரிவித்துள்ளார்.
அந்த நகரில் தொடர்ந்தும் பனிபெய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப்பயணிகள் மாத்திரமல்ல உள்ளுர் மக்களும் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர் அவர்கள் சமையல் எரிவாயு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 -20வருடங்களில் பெருமளவு பக்கம் அந்த பகுதிக்கு சென்றதால் இந்த நெருக்கடியான சூழ்நிலை உருவானது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப்பகுதிகள் உயிரிழந்துள்ள துயரமான சம்பவம் குறித்து பிரதமர் இம்ரான்கான் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
பாக்கிஸ்தானில் கார்கள் பனிப்பொழிவில் சிக்கியதில் 21 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 09, 2022
Rating:
No comments:
Post a Comment