கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து
குறித்த தீ விபத்து சம்பவத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகளின் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் மார்பு நோய் சிகிச்சை நிலையம், பாலியல் நோய் சிகிச்சை நிலையம், பரிசோதனை அறை, களஞ்சிய அறை, வைத்தியர் சிகிச்சை அறை ஆகியன எரிந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து
Reviewed by Author
on
January 21, 2022
Rating:
No comments:
Post a Comment