கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை
எவ்வாறாயினும், கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு இன்று 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று வழங்கப்பட மாட்டாது என சம்பந்தப்பட்ட வலயக் கல்வி பணிமனைகளுக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்திருந்தது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகத்திடம் வினவியபோது, திருத்தப்பட்ட சம்பளத்துடன் 5000 ரூபா கொடுப்பனவையும் இணைத்து வழங்குவதற்கு போதுமானளவு நிதி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நிதி கிடைத்தவுடன் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லை
Reviewed by Author
on
January 21, 2022
Rating:
No comments:
Post a Comment