மன்னாரில் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களுக்கு இடம்பெற்ற விசேட நிகழ்ச்சித்திட்டம்.
-மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையாளர்கள் நீதவான் நீதி மன்றத்தின் குற்றவாளிகள் என்று சொல்லாமல் தவறிழைத்தவர்கள் அதாவது சிறு சிறு தவறுகளை செய்தவர்கள் சமூக மட்டத்தில் குற்றவாளிகளாக கருதப்படும் குறித்த நபர்கள் மன்றிற்கு அழைக்கப்பட்டு செய்த தவறுகளுக்காக சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைகளுக்கு உட்படுத்தப்பட்டு கட்டளையின் நிபந்தனைக்கு அமைவாக மருத்துவ சிகிச்சை , உள நல ஆலோசனை சிகிச்சை, தனிநபர் ஆலோசனை , குடும்ப ஆலோசனை , மேற்பார்வை மற்றும் வாழ்வாதார உதவி திட்டம் தொழில் பயிற்சி போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம் குறித்த கட்டளையாளர்களுக்கு மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் உளநல ஆலோசனை மற்றும் மருத்துவ ஆலோசனை மருத்துவ சிகிச்சைகளுக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (8) குறித்த கட்டளையாளர்கள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து அடம்பன் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ள நந்தவனம் உளநல ஆற்றுப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆவர்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (8) ஆலோசனை கூட்டம் மற்றும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சித் திட்டம் ,சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
குறித்த நடவடிக்கையில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் சமுதாய சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை உள வள மருத்துவ உத்தியோகத்தர் ,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ , மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உளவள ஆலோசகர் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவு , சமுதாய சீர்திருத்த திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கட்டளைகளுக்கு சகல உதவிகளையும் வழங்கி வைத்தனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய போதைவஸ்து பாவனையாளர்கள் கட்டளையாளர்களாக ஆக வருகை தந்து ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக் கொண்டனர்.
குறித்த நடவடிக்கைக்கான அனுசரணையை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களுக்கு இடம்பெற்ற விசேட நிகழ்ச்சித்திட்டம்.
Reviewed by Author
on
February 08, 2022
Rating:

No comments:
Post a Comment