மன்னார் பிரதான பால கடற்கரையோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இடம் பெற்ற கண்டல் தாவர நடுகை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை அடிப்படையாக; கொண்டு 'கடற்கரை யோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் மன்னார் rotaract இளைஞர் கழக இளைஞர்கள் இணைந்து மன்னார் பிரதான பால பகுதியில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (07)காலை கண்டல் தாவரங்கள் நடுகை செய்துள்ளனர்.
மன்னார் ரொட்றாக் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் றொட்டரி கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு மரம் நடுகை யை ஆரம்பித்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கண்டல் தாவரங்கள் குறித்த பகுதியில் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
மன்னார் பிரதான பால கடற்கரையோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி இடம் பெற்ற கண்டல் தாவர நடுகை.
Reviewed by Vijithan
on
February 07, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 07, 2026
Rating:



.jpeg)





No comments:
Post a Comment