அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை: சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் கருத்து மோதல்!

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம் வினவினார். இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் கூறியிருந்தார். ஆனால், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுகின்றது. 

அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜதந்திர நடவடிக்கை என்ற கருத்து அரசியல் உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டது. கடந்த 5 வருட முண்டாட்சியில் நீங்கள் எதுவும் செய்யவில்லையே! எனவும், விரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.

மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை: சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் கருத்து மோதல்! Reviewed by Author on February 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.