அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை பாடசாலை விவகாரம்- தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களின் படங்களை நாகரிகமற்ற முறையில் பிரசுரித்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்தின் விவகாரம் தொடர்பில் தமிழ் ஆசிரியர்கள்-மாணவர்களின் படங்களை நாகரிகமற்ற முறையில் பிரசுரித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 

 திருகோணமலை தமிழர் சமூகத்தைச் சேர்ந்த சிலரின் உறுதியான முறைப்பாடுகளிற்கு அமைய திருகோண மலையில் உள்ள பொலீஸ் IT Dept மற்றும் BMICH ல் அமைந்துள்ள Cyber Crime Unit லும் ஸ்ரீ சண்முகா வித்தியாலத்திய விவகாரங்கள் விடயத்தில் தமிழ் ஆசிரியர்களின் மாணவர்களின் படங்களை நாகரிகமற்ற முறையில் பிரசுரித்து கீழ்த்தரமான பதிவுகளைச் செய்த நபர்கள், அமைப்புகள் சம்பந்தமான Investigation ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இவை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளும் கண்காணிக்கப் படுவதாகவும் அறியத்தரப்பட்டுள்ளது என திருகோணமலை தமிழர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பாடசாலை விவகாரம்- தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களின் படங்களை நாகரிகமற்ற முறையில் பிரசுரித்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பம் Reviewed by Author on February 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.