மன்னார் சித்திவிநாயகர் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற கடினபந்து சுற்று போட்டி நிறைவு நிகழ்வு
குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 10 உள்ளூர் அணிகள் கலந்து கொண்டன. 30 ஓவர்களை கொண்ட லீக் போட்டியானது சனி ஞாயிறு தினங்களில் இடம் பெற்ற நிலையில் பேசாலை சென்/விக்ரரிஸ் அணியினருக்கும் தாழ்வுபாடு சென்/அன்ரனிஸ் அணியினருக்குமான இறுதி போட்டியுடன் பரசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்/ அன்ரனிஸ் அணியினர் 30 ஓவர்களில் 10 விக்கட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்/விக்ரரிஸ் அணியினர் 29 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கி கொண்டனர்
குறித்த சுற்று போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக “ஒரு நடு ஒரு சட்டம்” செயலணியின் உறுப்பினரும் மன் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் முன்னைனாள் அதிபருமான திரு.தயனந்தராஜ அவர்களும் விசேட விருந்தினர்களாக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் அதிபர் திரு. பவபாலன், பிரதி அதிபர் திரு.மயூரன் சட்டத்தரணி செல்வராஜ் டினேஸன் , முருகன் கோவில் குருக்கள் சிவ சிறி மகா தர்ம குமார குருக்கள், சித்திவிநாயக இந்து கல்லூரி பழையமாணவர் சங்க உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட கடின பந்து சபை உறுப்பினர்கள் போட்டியில் பங்கு கொண்ட அணிகளின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு வெற்றி கிண்ணம் சான்றிதழ்கள் பரிசில்களை வழங்கி வைத்தனர்
மன்னார் சித்திவிநாயகர் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற கடினபந்து சுற்று போட்டி நிறைவு நிகழ்வு
Reviewed by Author
on
February 05, 2022
Rating:
No comments:
Post a Comment