அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றல்.

 க.பொ.த உயர்தர பரீட்சை இன்று திங்கட்கிழமை(7) ஆரம்பமாகி நிலையில் மன்னார் மாவட்டத்தில் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர். மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர். 

 இன்று காலை 9 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் சுகாதார வழி காட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர். இதேவேளை நாடளாவிய ரீதியில் உயர்தரப் பரீட்சைக்காக சுமார் 2 லட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66101 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
                 








மன்னாரில் க.பொ.த உயர்தர பரீட்சை மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றல். Reviewed by Author on February 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.