மன்னார் மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் புதன் கிழமை(09) காலை 8.30 தொடக்கம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மன்னார்,நானாட்டான்,மடு,முசலி,மாந்தை மேற்கு பகுதிகளை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 25 வருடங்களுக்கு மேலாக முன் பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில் இது வரை தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் முன் பள்ளிகளில் பல தரப்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்கு தங்களை பயன் படுத்துகின்ற போதும் தங்களுக்கு மாதம் வெறுமனே 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுவதாக முன்பள்ளி ஆசிரியர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.

No comments:
Post a Comment