அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை : உறவினர்கள் கவலையில்

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கடந்த ஆறு வருடங்களாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்கின்றதே தவிர குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. இவ்விடயம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், பண்டாரிக்குளம் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை. 

இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இப்படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு ஆறு வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை. இதனால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளோம் . ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமடைந்துள்ளனர் . ஹரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போராடி வருகின்றோம். இனியும் காலங்களை கடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப்படுகொலைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர் .


வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை : உறவினர்கள் கவலையில் Reviewed by Author on February 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.