மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி-கூலர் வாகனம் மோதி விபத்தில் சிறுவன் மரணம்
முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகி வீதிக்கு அருகாமையில் வெள்ள நீருக்குள் வீசி எறியப்பட்ட நிலையில் காணப்பட்டது.
பலத்த காயங்களுக்கு உள்ளான தாய் சந்தியோகு செல்வி (வயது- 30), மகன்களான கெபின் கரன் (வயது -6), கானோர் ( வயது- 1) ஆகியோருடன் ஆட்டோ சாரதியும் பலத்த காயங்களுடன் பேசாலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் தீவிர சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மகன் கெபின்கரன் (வயது -6) மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ஏனைய மூவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறித்த கூலர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் முச்சக்கர வண்டி-கூலர் வாகனம் மோதி விபத்தில் சிறுவன் மரணம்
Reviewed by Author
on
February 06, 2022
Rating:
No comments:
Post a Comment