அண்மைய செய்திகள்

recent
-

ரஷ்யாவில் நடக்க இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் சபை உத்தரவிட்டுள்ளது. 

 இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, “ரஷ்ய மற்றும் பொலரஸ் அரசாங்கங்கள் ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறியுள்ளன. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கு முழுமையான முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதனால் ரஷ்யா மற்றும் பொலரஸில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றவும் அல்லது ரத்து செய்யவும் அனைத்து விளையாட்டு கூட்டமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நடக்க இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து Reviewed by Author on February 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.