அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல்! நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் களநிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(25) மதியம் 12.00மணிக்கு மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தற்போதுள்ள சூழ்நிலையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரங்களை ஆராய்ந்து மக்களுக்கு இலகுவன வழியில் அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக் கொள்ளதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

 இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, பிரதேச செயலாளர்கள், கூட்டுறவு உதவி ஆணையாளர், முல்லைத்தீவு மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், மாவட்டத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

சண்முகம் தவசீலன்











முல்லைத்தீவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல்! Reviewed by Author on March 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.