உக்ரைன் தலைநகரில் தாக்குதலைக் குறைக்க ரஷ்யா இணக்கம்
இதனிடையே, தங்களுக்கு மேற்கத்திய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், ரஷ்யா வலியுறுத்தும் அணிசாரா நிலைப்பாட்டை ஏற்க சம்மதம் தெரிவிப்பதாக இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் தெரிவித்துள்ளது.
நேட்டோவில் இணையாமலேயே உக்ரைனின் பாதுகாப்பிற்கு மேற்கத்திய நாடுகள் உத்தவாதம் அளித்தால், அணிசாரா நிலைப்பாட்டை ஏற்போம் என உக்ரைனின் பேச்சுவாா்த்தைக் குழு உறுப்பினா் டேவிட் அரகாமியா குறிப்பிட்டுள்ளார்.
NATO-வின் 5-ஆவது சட்ட விதியின்படி, அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாட்டின் மீது யாராவது படையெடுத்தால்தான் அது மற்ற உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு இணையாகும். அப்போதுதான், NATO அமைப்பு எதிா்வினையாற்றும்.
அணிசாரா நிலைப்பாட்டை எடுத்தால், NATO-வில் இணையும் விருப்பத்தை உக்ரைன் நிரந்தரமாகக் கைவிட வேண்டியிருக்கும்.
உக்ரைன் தலைநகரில் தாக்குதலைக் குறைக்க ரஷ்யா இணக்கம்
Reviewed by Author
on
March 30, 2022
Rating:

No comments:
Post a Comment