நாளாந்த மின் வெட்டு 15 மணி நேரமாகலாம் -மின்சார பொறியியலாளர் சங்கம்
தற்போது வரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1,200 மெகா வோட் மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றபோதிலும், நீர் இன்மை யால், மதிய நேரத்தில் 300 மெகா வோட் மின்சாரத்தையும், இரவு நேரத்தில் 700 மெகாவொட் மின்சாரத்தையும் மாத்திரமே வழங்க முடியும்.
அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், 1,700 மெகாட் அளவில் கொள்ளளவு இருக்கின்றபோதிலும், எரிபொருள் இன்மையால், 1,000 மெகா வோட் மின்சாரத்தை மாத்திரமே வழங்க முடியும்.
ஆனால், இரவு நேரத்தில் மாத்திரம் 1, 800 மெகா வோட் மின்சாரத்துக்கான கேள்வி உள்ளது.
எனவே, விநியோகத்தில் நிச்சயமாக வீழ்ச்சி உள்ளது. தற்போது வரையில், பாஜ் மின்னுற்பத்தி நிலையத்திற்கும், களனிதிஸ்ஸ கூட்டு மின்னுற்பத்தி நிலையத்துக்கும், 1,500 மெட்ரிக் தொன் எரிபொருள் மாத்திரமே கிடைத்துள்ளது.
எரிபொருளில் இயங்கும் வேறு எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்துக்கும், எரிபொருள் கிடைக்கவில்லை.
தாங்கள் அறிந்த வகையில், இன்றும் நாளையும் எரிபொருள் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று 10 மணித்தியாலங்கள் அமுல்படுத்தப் படும் மின் தடை வரும் நாட்களில், 12 மணித்தியாலங்களாகவும், 15 மணித்தியாலங் களாகவும் அதிகரிக்க வேண்டி ஏற்படக்கூடும்.
எனவே, மின்சாரம் விநியோகிக்கப்படும் நேரத்தைக் கூறுவது சிறந்ததாகும்.
விரைவாக எரிபொருளைப் பெற்றுக்கொடுத்தால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இயன்றளவு குறைக்க முடியும் என அரசாங்கத்துக்கு அறியப்படுத்தியுள்ளதாக, மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாளாந்த மின் வெட்டு 15 மணி நேரமாகலாம் -மின்சார பொறியியலாளர் சங்கம்
Reviewed by Author
on
March 31, 2022
Rating:
Reviewed by Author
on
March 31, 2022
Rating:


No comments:
Post a Comment