ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான தமிழர்களின் வரலாற்று அடையாளமான மன்னார் திருக்கேதீச்சர கோவிலின் சிவராத்திரி திருவிழா-
மன்னார் பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்துதலிலும் மன்னார் மாவட்ட செயலாளர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரின் மேற்பார்வையில் வெளி நிர்வாக ஒழுங்குகள் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.
பக்திபூர்வமாக பூஜைகள் நடைபெற்று வருவதுடன் பக்தர்களும் மிக அமைதியாக தீர்த்தம் எடுத்து வந்து மூல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே திருக்கேதீச்சரத்தில் வலுவூட்டல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம் முறை ஐந்து லட்சம் பக்தர்களே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நள்ளிரவு வரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பூஜை வழிபாடுகள் மற்றும் நேத்திகடன்களை செலுத்திவருகின்றமை குறிப்பிடதக்கத
ஈழத்தில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான தமிழர்களின் வரலாற்று அடையாளமான மன்னார் திருக்கேதீச்சர கோவிலின் சிவராத்திரி திருவிழா-
Reviewed by Author
on
March 01, 2022
Rating:

No comments:
Post a Comment