இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
இதையடுத்து கியூ பிராஞ்ச் போலீஸார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இலங்கை தலைமன்னார், யாழ்பாணத்தில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது
இதையடுத்து ஆறு நபர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்திய பின்னர் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் தற்போது கஜேந்திரன், மேரி கிளாரி, நிஷாஜ்
தியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட ஆறு நபர்கள் அகதிகளாக எதற்கு வந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதோடு மேலும் இது போன்று இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வர தயாராக இருப்பதாக விசாரணையில் தெரியவருகிறது.
இதையடுத்து இலங்கையில் இருந்து அகதிகளாக அதிகமான அளவு தமிழகத்துக்கு வர வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை, கியூ பிரிவு, மரைன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கையர்கள்
Reviewed by Author
on
March 22, 2022
Rating:
Reviewed by Author
on
March 22, 2022
Rating:





No comments:
Post a Comment