அண்மைய செய்திகள்

recent
-

மாயமான இளைஞர் கை,கால் கட்டிய நிலையில் மீட்பு – யாழில் கொடூரம்

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார் என்று கூறப்படும் இளைஞர்,நேற்று இரவு மீட்கப்பட்டார். நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அருகில் கைகள், கால்கள் கட்டபட்ட நிலையில் அந்த இளைஞர் மீட்கப்பட்டார் என்று கூறப்படுகின்றது. மீட்கப்படட இளைஞர் மருத்துவப் பரிசோதனைக்காக அச்சுவேலி மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார். அருந்தவராசா சயந்தன் 30 வயதுடைய இளைஞரே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் முன்னுள்ள தோட்டவெளியில் மூவர் அவரைத் துரத்திச் சென்றனர் என்றும்,அதன் பின்னர் இளைஞர்வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரது உறவினர்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேவேளை,கடந்த 12 ஆம் திகதி இந்த இளைஞரின் வீட்டுக்கு வந்த இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் இளைஞரின் தந்தை காயமடைந்த நிலையில்,தற்போதும் யாழ்ப்பாணம் போதனா மறுத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இளைஞரின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே முழுமையான தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாயமான இளைஞர் கை,கால் கட்டிய நிலையில் மீட்பு – யாழில் கொடூரம் Reviewed by Author on March 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.