தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு-மன்னாரில் நகை கடை உரிமையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் பாதிப்பு
குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து 24 கரட் தங்கம் ஒரு லட்சத்து ஐம்பத்து எட்டாயிரம் தொடக்கம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வரையில் அதிகரித்துள்ளமையினால் மக்கள் நகை கொள்வனவுகளில் ஆர்வம் காட்டுவதை தவிர்த்து வருவதாகவும் இதனால் விற்பனை சடுதியாக குறைந்துள்ளதாகவும் நகை விற்பனை நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தொடர்ச்சியாக விற்பனை நடவடிக்கை குறைந்து உள்ளமையினால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல்,நகை விற்பனை நிலையங்களுக்கான மின் கட்டணம் , நீர் கட்டணம் மற்றும் வாடகை பணம் செலுத்துவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி மற்றும் தங்க விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட நகை விற்பனை நிலைய உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு-மன்னாரில் நகை கடை உரிமையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் பாதிப்பு
Reviewed by Author
on
March 24, 2022
Rating:
Reviewed by Author
on
March 24, 2022
Rating:







No comments:
Post a Comment