கொழும்பில் குப்பைகளை சேகரிக்கும் செயல்பாடு நிறுத்தம்- கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் இக்பால்
இதேவேளை கொழும்பு மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் ராஜு பாஸ்கர் கருத்து தெரிவிக்கையில்,,,
நகரின் குப்பைகளை சேகரிப்பதற்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் எங்கிருந்தோ டீசலை கொண்டு வந்து குப்பைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேவையான பெற்றோல் எமக்கு கிடைக்காமை காரணமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றுவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டது.
நேற்றைய தினம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் தேவையான பெற்றோல் கிடைக்கப்பெற்றது.எதிர் வரும் ஓரிரு தினங்களுக்குள் கொழும்பு நகரில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டீசல் பெற்றோல் நெருக்கடி காரணமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சில பகுதிகளில் ஓரிரு நாள் குப்பை அகற்றும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமல் போனது.
வெள்ளவத்தை கொள்ளுபிட்டி மற்றும் பம்பலபிட்டி ஆகிய பகுதிகளில் ஒரு நாளும் மற்றைய நாள்; கோட்டை பகுதியில் குப்பைகளை அகற்ற முடியாது போனது.
குறித்த சிக்கல் நிலையின் காரணமாக நகரின் குப்பைகள் இரு நாட்கள் மாத்திரமே ஆகற்ற முடியாது போனது. ஆனால் தற்போது அவ்வாறான ஒரு சிக்கல் நிலை இல்லை.
நாங்கள் நகரின் குப்பைகளை சேகரிப்பதற்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் அவர்கள் டீசல் இல்லை என தெரிவித்து குப்பைகளை அகற்றாமல் இருக்க முடியாது. அவர்கள் குப்பைகளை அகற்றியே ஆக வேண்டும் அதற்காக தான் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் குப்பைகளை சேகரிக்கும் செயல்பாடு நிறுத்தம்- கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் இக்பால்
Reviewed by Author
on
March 25, 2022
Rating:
Reviewed by Author
on
March 25, 2022
Rating:



No comments:
Post a Comment