முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நட்டாங்கண்டல் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் இடையில் சந்திப்பு!
இன்று (25) காலை மாந்தை கிழக்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்தசந்திப்பில் பிரதேச மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் ,சட்டவிரோத மண்ணகழ்வு மற்றும் கசிப்பு உற்பத்திகள் போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது
இதேவேளை பல்வேறு பிரதேசங்களில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு கஞ்சா, கெரோயின் போன்றன கடத்தப்படுவதால் இளைய தலைமுறை போதைப்பொருள்களுக்கு அடிமையாக மாறும் சூழல் நிலவுவதுடன் பாடசாலை மாணவர்களும் போதை பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாக மாறும் அவல நிலை ஏற்படும் என்றும் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்
இதன்போது கருத்து தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தங்களது பூரண ஒத்துழைப்பை தருமாறு தவிசாளர் மற்றும் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்
-
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் நட்டாங்கண்டல் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் இடையில் சந்திப்பு!
Reviewed by Author
on
March 25, 2022
Rating:
Reviewed by Author
on
March 25, 2022
Rating:


No comments:
Post a Comment