பிரதமரின் மகா சிவராத்திரி தின வாழ்த்து செய்தி..
ஆரோக்கியமும் சுபீட்சமும் அபிலாஷைகளும் நாட்டிற்கு கைகூட, மகா சிவராத்திரியில் பிரார்த்திப்போம்…
இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் முழு முதற் கடவுளான சிவபெருமானை நினைந்து விரதம் அனுட்டித்து,
பக்தியோடு கொண்டாடும் மகா சிவராத்திரி புனித நன்னாளிலே - இந்த வாழ்த்துச் செய்தியினைக் கூறிக் கொள்வதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
செழிப்பான ஒரு வாழ்க்கைப் பயணத்திற்கு ஆன்மிக உணர்வு அடிப்படையான ஒன்று.
இது சகல சமயத்தவருக்கும் பொதுவானது.
இந்துக்கள் அனைவராலும் புனிதமாக அனுட்டிக்கப்படும் விரத தினங்களிலே, மகா சிவராத்திரி மகோன்னதமானது.
இந்த நன்னாள், இந்து மக்கள் அனைவராலும் ஆன்மிக உணர்வோடு சிறப்புற அனுட்டிக்கப்படும் சுபீட்சத்துக்கான பெருநாள் ஆகும்.
கண்விழித்து, இறை அனுபவத்தோடு, அனைவரும் ஒருமித்த ஆன்மிக உணர்வோடு வழிபடும் நன்னாள் இந்த மகாசிவராத்திரி.
வாழ்க்கையிலே துன்பங்கள் என்ற இருள் நீங்கி இன்ப ஒளி எங்கும் பரவ வேண்டித் துதிக்கும் பக்தி மிகுந்த இந்த நாளிலே - அனைவருக்கும் சௌபாக்கியமே கிடைக்க இறையருளை மனதார வேண்டித் துதிப்போம்.
ஆரோக்கியமானதும் சுபீட்சம் மிக்கதும் அபிலாஷைகள் எல்லாம் கைகூடுவதுமான ஒர் எதிர்காலம் - இலங்கைத் தாயின் மக்கள் அனைவருக்கும் அமைய வேண்டும் என்கின்ற பிரார்த்தனையோடு -
இந்தப் புனித நாளிலே வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
அனைவருக்கும் நலமே விளையட்டும்!
நாடு நலம் பெறட்டும்!
மஹிந்த ராஜபக்ஷ
பிரதமரின் மகா சிவராத்திரி தின வாழ்த்து செய்தி..
Reviewed by Author
on
March 01, 2022
Rating:

No comments:
Post a Comment