அண்மைய செய்திகள்

recent
-

இருபத்தியொராம் நூற்றாண்டு தந்த ஈழத்தமிழினத்தின் இறைவாக்கினர்

மானிட மான்பின் காவலரும் மானிட நேயத்தின் மறு பெயருமான மன்னார் மறைமாவட்டத்தின் வாழ்நாள் ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களின் இறைசாட்சிய வாழ்வுக்கும் திருப்பணிக்கும் இறைபாதம் பணிந்து சிரந்தாழ்த்தி நன்றி கூறுகிறோம் தனியொரு திருச்சபையின் ஆயர் என்பதற்க்கு அப்பால் அவரின் திருப்பணி பரந்து வியாபித்துள்ளது. கெடூர ஒடுக்குமுறைக்குட்பட்டு சிதைவடைந்து இன அழிப்புக்குடபட்டு நம்பிக்கையிழந்துபோன ஈழத்தழினத்தின் விடிவுக்காக தன்னை முழுமையாக அர்பணித்து அரும்பாடுபட்டு வரும் குரலற்று நலிந்துபோன மக்களின் குரலாகவும் வாழுகின்ற இறைவாக்கின் குரலாகவும் தமிழின விடுதலை இறையயலின் செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். அகில உலக தொடர்புகளை துண்டித்து ஊடகங்களையெல்லாம் இருட்டடிப்பு செய்து நிகழ்தப்பட்ட சாட்சிகளற்ற முள்ளி வாய்கால் தமிழின அழிப்பின் ஒற்றைச்சாட்சியாக நின்று இன இழிப்பிற்கு நீதி வேண்டி உலகின் மனச்சாட்சியைத் தட்யெழுப்பியவரான தனது மகத்தான பணியினை சாவின் இருள் நிறைந்த பூமியில் ஆற்றினார். 

 அவ்வகையில் ஆயரவர்கள் ஈழத்தமிழினத்தின் இருள் அகற்ற இறைவால் இவ்வினத்திற்கு வழங்கப்பட்ட மாபெரும் கொடையாகும். இந்த நூற்ற்ண்டில் ஈழத்தமிழினம் பெற்ற மோசே ஆவார். வரலாறு பல தலைவர்களை உருவாக்கிறது ஆனால் சில உயரிய மனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் அவ்வகையில் ஆயரவர்கள் புதிய வரலாற்றினை உருவாக்கி தனிமனித வரலாறாகத்திகழ்கிறார் இவரால் சமகால வரலாறும் ஈழத்தமிழினமும் பெருமையடைகின்றது. 

 இறைபணி புத்துயிர் பெறுகின்றது ஆண்டவர் இயேசுவின் விடுதலைப் பணி அர்த்தமுள்ளதாகின்றது. பிறப்பும் கல்வியும் ஈழவளநாட்டடின் நெற்றித்திலகமாக விழங்கும் பல வளங்களும் தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளுடனும் பல் சமய ஒற்றுமையுடனும் தமிழ் தேசிய பற்றுதியுடனும் மிளிரும் தீவாகிய நெடுந்தீவு கிழக்கில் வசித்துவந்த சுதேசிய வைத்தியரான திரு.இராயப்பு அவர்களுக்கும் அவர் இல்லாள் திருமதி அந்தோனியாப்பிள்ளளை அவர்கட்கும் 1940ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ம்திகதி பிறந்தார் நான்கு சகோதரர்களையும் ஒருசகோதரியினையும் கொண்ட குடும்பத்தில் நான்காவது மகனாகப்பிறந்தார். 

 தனது ஆரம்பக்கல்வியினை நெடுந்தீவு புனித சவேரியார் வித்தியாலயத்திலும் பின்னர் இவருடைய குடும்பத்தினர் செட்டிகுளத்தில் குடியேறியபின்னர் முருங்கன் மகாவித்தியலயத்திலும் இடைநிலை உயர்கல்வியை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் நிறைவுசெய்தார் இறை அழைத்தலை உனர்து கொண்ட இவர் குருத்துவ உருவாக்க பயிற்சி செறியினை யாழி மாட்டீனர் சிறிய குருமடத்ததிலும் இறையில் மெய்யியல் கல்வியினை அம்பிட்டிய தேசியகுருமடம் மற்றிறும் திருச்சி தூய பவுல் இறையியல் கல்லுரியிலும் நிறைவு செய்து 1967 ம் ஆண்டு குருவானவராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் பின்னர் ரோமபுரியில் உள்ள ஊர்பன் பல்கலைக்கழகத்தில் திருச்சபை நியதிச்சட்ட கோட்பாட்டில் காலாநிதிப்பட்;டம் பெற்றார். 

 யாழ் மறை மாவட்டத்தல் பல பங்குகளில் பங்கு தந்தையாகவும் கொழும்புத்துறை புனித சவேரியார் பெரிய குருமடத்தின் பேராசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி 1992ம் ஆண்டு மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

  குரலற்ற மக்களின் குரல் 

ஆயர் அவர்கள் ஆயராகப் பொறுப்பேற்ற காலம் தமிழின வரலாற்றில் மிகவும் இடர்மிகுந்ததும் இக்கட்டான காலமுமாகும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடும் வன்முறை நிலவிய கலமாக இருந்தது தமிழ்மக்களுடைய போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியிருந்த சூழலில் மக்கள்மீது போரும் பொருளாதாரதத்தடையும் கட்டவிழ்துவிடப்பட்டு மக்களின் உயிர் உடமை அழிவுகளெல்லாம் உலகிற்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என மூடிமறைக்கப்பட்டு சர்தேசத்தை ஏமாற்றி அரசபயங்கரவாதம் தலைவிரித்தாடிய சூழலில் தனியொருவராக நின்று அனைத்து அழிவுகளையும் அநீதிகளையும் வெளிக்pகொண்டு கிட்லரின் கொடூர ஆட்சிக்கெதிராக குரல்கொடுத்து தன்னையே தியாகப்பலியாக்கிய ஜேர்மன் தேச இறையியலாளர் டீயற்றிச் வொண்கொபர்(னுநைவசiஉh டீழபெழகநச) பேன்று நீதியை இடித்துரைத்து உலகிற்கு உண்மையினை உணரவைத்தவர்.

 யோவான் நற்செய்தி அதிகாரம்;10 11ம் திருவார்த்தை கூறுவது போல நல்ல ஆயன் நானே நல்ல ஆயர் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார் எனனும் திருவார்த்தைகளின் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.

  மக்களின் துன்னபத்திலும் வேதனையிலும் பங்கெடுத்த மக்கள் ஆயர்

எங்கெல்லாம் மக்கள் துன்புற்றார்களோ அங்கெல்லர் உடன் நேரடியாகச் சென்று மக்களின் துன்பங்களில் பங்கெடுதத்து அவர்களின் துயர் துடைத்தவர் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இடித்துரைத்தார். 2009 ல் வன்னியில் திட்டமிட்டு மானிடப்பேரவலம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மக்கள் ஏதிலிகளாய் இடம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கையில் கிநொச்சசி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வெளியில் இருந்து உள்நூளைய அரசினால் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த சூழலில் இடம் பெயர்ந்த மக்கள் புதுக்குடியிருப்பிலே முடக்கப்பட்டு செல்வீச்சுக்களாலும் விமானத்தாக்குதல்களாலும் மக்கள் தொடர்து வகைதொயின்றி கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் ஆயர் துணிவுடன் தன்னுயிரை துச்சமென மதித்து... . அன்று புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்றுமக்களை சந்தித்து ஆறுதல் படுத்தி வந்தவர் பின்னர் இம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தவும் போர்ப் பிரதேசங்களில் சர்வதேசக் கண்காணிப்புடன் மோதல் தவிர்பு வலயங்களை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்க வெளிநாட்டு துர்தரங்களையும் சர்வதேச நாடுகளையும் இடையறாது தொடர்பு கொண்டு கடும் முயற்ச்சி எடுத்தவர். இறுதிப்போரின் பின்னர் இடம் பெயர்தவர்கள் காயமடைந்து மருத்துவமனைளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அனாதரவாய் நின்றோர் மீது அதிக கரிசகை கொண்டு பணியாற்றியவர்ச சிறப்பாக அனாதரவாய் இருந்த முதியோர் சிறார்கள் போன்றோரைப் பொறுப்பேற்று அவர்களுக்கான இல்லங்களை உருவாக்கி அவர்களைச் சிறப்பாக பராமரித்தார். போரினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாவர்கள் மீது சிறப்பு கவனம் எடுத்து அவர்களை பராமரித்து சிகிற்சையளித்து குணப்படுத்த வவுனியாவில் கிளறீசியன் சபையினரின் உதவியுடன் வரோட் எனும் மிகப்பெரிய தொண்டு நிறுவனத்தினை நிறுவி பல்லாரிரக்கணக்கானோர் பயன் பெற வழிசமைத்தார். 

 முள்ளிவாக்காலில் பெரும் இனவழிப்பு நிகழ்தப்பட்டு உரிமைப்போராட்டம் நசுக்கப்பட்டு விட்தாவுவம் தழிழினத்தின் தலமைத்துவம் வெறுமைப்படுத்தப்பட்டுவிட்டது என்கின்ற சூழலில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மனித உரிமைகள் மீறல்களுக்காவும் குரல் காடுத்து செயலாற்ற வடக்கு கிழக்கு வாழ் சமுகசெயற்பாட்டாளர்கள் துறைசார்வல்லுனர்கள் கல்வியலாளர்கள் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஆகியோரை ஓன்று திரட்டி 2012 ம் ஆண்டு தமிழ் சிவில் சமுக அமையத்தினை ஆரம்பித்தார் இவ் அமைப்பே போருக்கு பின்னர் வடக்கு கிழக்கை மையமாகக் கொண்டு முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் மைய சுயாதினா சிவில் அமைப்பாகும். எல்லா நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அழிப்புகளுக்கு நீதிவேண்டி சர்வதேசத்தின் மனச்சாட்சிகளை தட்டி. 

நிகழ்ந்த இறுதி போரில் ஒரலட்சத்து நாற்பத்தாறாயிரத்து அறுநூற்றி எழுபத்தி ஒன்பது பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டோ அல்லது காணாமலாக்கப்பட்டோ உள்ளனர் என்னும் எண்ணிக்கையிளை சரியான ஆதாரங்களுடனும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் சாட்சியத்தோடும் முதல் முதலில் முன்வைத்து ஆதாரப்படுத்தியவர் முள்ளிவாக்கால் இன அழிப்பபுக்கு பின்னரான கட்டமைக்கப்பட் இனவழிப்பு நடத்தப்பட்டு வந்த காலப்பகுதில் 2013 ம் ஆண்டு ல் 131 இறைபணியளர்களுடன் ஒப்பமிட்டு கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரா கடந்த வரும் நிறைவேற்றிய ஐ.நா சபைத்தீர்மானம் கானால் நீராகி விட்டது 2013 ம் ஆண்டுத் தீர்மானத்தினை வலுவுள்ளதாக்கும் படி ஐ.நா சபைக்கு கடிதம் அனுப்பினார்.இவ்வியடம் இலங்கை அரசுக்கு மிகப்பொரும் பூகம்பமாக மாறியது எனினும் அவர் தனது நீதியின் பயணத்தில் பின் வாங்கவில்லை. 'பேசத்தெரியாதவர்கள் சார்பாக பேசு திக்கெற்றவர்கள் எல்லோருடைய உரிமைகளுக்காகவும் போராடு அவர்கள் சார்பாகப்பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு'(நீதிமொழிகள்.31:8-9) எனும் மறைவார்த்தைகளை வாழ்வின் சாட்சியமாக்கிச் செயற்பட்டார். 

  வாழும் இறைவாக்கின் குரலாய் வாழ்ந்தவர் 

இறைவாக்கினர் என்பவர்கள் இறைவனின் நாவாகச்செயற்படுகின்றவர்கள் இவர்கள் மானிட மான்பு சிதைக்கப்பட்டு மனிதம் மழுங்கடிக்கப்பட்டு போகின்ற சூழலில் இறைவனின் பிரதிநிதியாக அவரின் நாவாக செயற்பட்டு தீமையையும் அநீதியையும் இடித்துரைத்து மனிதம் மலர நீதி எழுற்சியுற அச்சறுத்தல்கள் ஆபத்துக்களை பொருட்படுத்தாது தீவிரமாகச் செயற்படுகின்றவர்களாவர். 

திருமறையில் படைப்பின் வரலாற்றில் நாம் காணும் கடவுள் அழிக்கப்படுபவர்கள் சார்பில் குரல் எழுப்புவபராக காhணப்படுகிறார். ஆபேல் அனியாயமாக கொல்லப்பட்டபோது அவன் சார்பாக கடவுள் குரலெழுப்புகிறவராக(தொ.நூல்.4:9) ஒடுக்குலுக்கும் அதனால் ஏற்படும் அழிவின் அவலக்குரல் கடவுள் சமுகத்தில் எழும் அதனுடன் இணைந்து கடவுள் நீதிகேட்பவராக உள்ளார் அது இறைவனின் நீதிக்குரலாக மாறுகிறது (தொ.நூல்.4:10). 

அவ்வகையில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆயர் அவர்கள் தனியொருவராக நின்று இருட்டடிக்கப்பட்ட சூழலில் இறைவனின் அழைப்புக்கு தன்னை அர்பணிர்து விடுதலைக்காக அதிகாரபலமும் வல்லமையும் பொருந்திய பார்வோனிற்கு முன்னால் நின்று கடவுளின் பெயரால் விடுதலை முளக்கமிட்ட கொடுங்கோல் அதிகாரத்துக்கு சவால் விட்ட விடுதலைப்பயண மோசேயைப்போல் 1980களில் எல்சல்வடோரில் இராணுவ ஒடுக்கு முறைக்கு எதிராக இறைவாக்ககின் குரலாக ஒலித்த பேராயர் ஒஸ்கார் ரொமேராவைப்போல்(ழுளஉயசசுழஅநசழ) இறைவாக்கின் இடையறாத தொடர்சியான இறைவாக்குப்பணியாற்றி மானிட விழுமியத்தின் நீதியின் காவலராக இனமான ஏந்தலாய் ஒடுக்குகின்ற அந்தகார எதோச்சாதிகார சக்திகளுக்கு சிம்ம சொற்பனமாக செற்பட்டார். 

  செயற்பாட்டு மைய விடுதலை இறையியலாளராக

திருமறையிலே நாம்காணும் கடவுள் விடுதலையின் கடவுளாக ஒடுக்கப்படுவோரின் கடவுளாக இருக்கிறார் கடவுள் எப்பொழுதும் உரிமையிழந்தவர்களின் சிறுபான்மையினரின் பிரதிநிதியாக அவர்களின் துன்பங்களில் பங்கெடுக்கின்றவராகவே காணப்படுகிறார் இவ்வகையில் விடுதலைப்பயணத்திலும் சரி திருமறையிலும் சரி கடவுளின் வெளிப்பாடு புரிந்துணர்வு இவ்வாறானதாகவே இருக்கின்றது. இவ்வகையிலே உலகத் திருச்சபை வரலாற்றிலே முக்கிய எழிற்சியாக 1960 களில் இலத்தின் அமெரிக்க நாடுகளில் தோற்றம் பெற்ற விடுதலை இறையியல் முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனையாகும் விடுதலை இறையியலின் ஆரம்பகர்தாவான அருட்பணி.குஸ்ராவோகுட்டரியஸ்(புரளவயஎழ புரவநைசசநண) அவர்கள் விடுதலை இறையியலின் மையக்கருத்தாக முன்வைப்பது யாதெனில் செயற்படும் பற்றுதிமைய அர்பணிப்புடனான அநீதிக்கு எதிரான போராட்டம் இறையாட்சி மைய நீதியான சமுகம் நோக்கியது என்பதாகும் இவ்வகையில் இம்மண்ணிலிருந்து இவ்விறையியலுக்கு செயல்வடிவம் கொடுப்பவராக இறையாட்சி திருமறைசார் பற்றுதிமையத்திலிருந்து ஈழத்தமிழினத்தின் வாழ்வில் சூழல் சார் ஜதார்த்த விடுதலை இறையியலை செயற்படுத்தி இதனூடாக தமிழின விடுதலைக்கு வாழ்வாலும் செயலாலும் அரும்பாடுபட்ட்டார். 

 இவ்வாறாக பல்வேறு வழிகளில் கருவறுக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் விடுலைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தன்னை முழுமையாக அர்பணித்து திருப்பணியாற்றிய ஆயர் அவர்களின் இழப்பு என்பது என்றும் ஈடு செய்யப்பட முடியாதவொன்றாகும் வரலாற்றில் பல அழிப்புக்களுக்கும் இழப்புக்களுக்கும் முகங்கொடுத்த தமிழினத்தின் ஒரே ஓரு அறுதலாகவும் நம்பிக்கையாகவும் விளங்கிய தன்னுடைய தலைமகனை விடுதலைக்கு வழிகாட்டிய மோசேயை எவ்விடர் வந்தபோதும் அஞ்சாமல் இன விடியலக்காய் குருசோத்திரத்தில் இருந்து அறப்போராடிய பீஸ்மரை எவ்வேளைகளிலும் ஆறுதல் தந்த பிதமகனை மானிட விடியலுக்காய் எந்தவித எதோச்சாதிகாரத்துக்கும் தலை வணங்காது நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் சாத்வீகப்பாதையில் போராடிய மகாத்மாவை ஈழத்தமிழினம் இழந்து பெருந்துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது மே 18 2009 பின்னர் உலகத் தமிழினத்தின் உள்ளங்களில் பேரிடியாய் விழுந்தநாள் 2021 ஏப்பிரல.;01. இந்த நிகழ்வும் இரண்டாது முள்வாய்க்கால் பெருந்துன்பமாய் தமிழ்பேசும் நல்லுகத்தை வாட்டுகிறது யாரொடு நோவோம் யாரக்கெடுத்து உரைப்போம் என எனவும் இதனால் எங்கள் இதயம் தளர்ந்து போயிற்று எங்கள் கண்கள் இருண்டு போயின என உலத் தமிழினம் அங்கலாய்த்து நிக்கிறது. எனவே நாம் ஒன்று பட்டு ஆயர் காட்டிய வழியில் நின்று அவரின் பணியை தொடர்வே ஆயர்அவர்களுக்கு செய்யும் உண்மையான இதய பூர்வமான அஞ்சலியாகும். 

அருட்பணி கந்தையா ஜெகதாஸ் 
மெதடிஸ்த திருச்சபை
 சின்ன ஊறணி மட்டக்களப்பு




இருபத்தியொராம் நூற்றாண்டு தந்த ஈழத்தமிழினத்தின் இறைவாக்கினர் Reviewed by Author on April 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.