அண்மைய செய்திகள்

recent
-

பொருளாதார நெருக்கடியினால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(23) காலை 11 மணியளவில் சர்வோதய மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது டயலெக்,ஹேமாஸ்,மாஸ், C B L குரூப் ஆகிய நிறுவனங்களின் நிதி உதவியின் கீழ் சர்வோதயாவின் ஏற்பாட்டில் மேற்படி உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது அத்தியாவசிய பொருட்களான அரிசி ,பருப்பு,சீனி,நெத்தலி,சோயா,தேயிலை,வெங்காயம் உள்ளடங்களான அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய உணவு பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு ஏற்கனவே உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 50 குடும்பங்களுக்கான உணவு பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது பொருளாதார நெருக்கடியினால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உணவு பொதிகள் வழங்கும் குறித்த நிகழ்வில் கிராம அலுவலர்களான எஸ் எப் சிபாயா ,எஸ்.ஜேசுரட்ணம், ஜே.அஜித்தன் சர்வோதய நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சத்தியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்தனர் 

 இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களில் 10000 ற்கு மேற்பட்ட உணவு பொதிகள் வழங்கும் குறித்த செயற்றிட்டத்தின்கீழ் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 400 உணவு பொதிகளும், கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 400 உணவு பொதிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 250 உணவு பொதிகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 200 உணவு பொதிகளும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 200 உணவு பொதிகளும், வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் 50 உணவு பொதிகளுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1500 உணவு பொதிகள் மேற்படி செயற்திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது










பொருளாதார நெருக்கடியினால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு Reviewed by Author on April 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.