அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச புவி தினம் இன்றாகும்

புவி தினம் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் நாளன்று புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில் அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும். இந்நாளில், அழிந்து வரும் வனம், சூழல் மாசடைதல், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவை யால், பூமி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மக்கள் அதிகப்படியான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி, அவற்றை கழிவாக வெளியேற்றுவதால், மண் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பூமி கடும் பாதிப்பை அடைகிறது. மரங்கள் வெட்டுதல், விவசாயத்தில் அதிகப்படியான இரசாயனப் பயன்பாடு, பிளாஸ்டிக் எரிப்பு, தொழிற்சாலைப் புகை, குளிர்சாதனப் பெட்டிகளில் புகை என, பல காரணங்களால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது. எம்மை வாழவைக்கும் பூமி ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச புவி தினத்தில், நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டை குறைத்து, பூமித்தாயைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்


.
சர்வதேச புவி தினம் இன்றாகும் Reviewed by Author on April 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.