இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி-வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா-
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தமைக்கு தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நிலவக்கூடிய இந்த கஷ்ட காலத்தில் மத்திய அரசு மூலமாக உதவி செய்ய முன்வந்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன் .
இந்தியாவிடமிருந்து தற்போது மருத்துவ உதவிகள் கிடைத்துள்ளது. தொடர்ந்து எந்த மாதிரி நடவடிக்கைகள் தேவை என்பதை அரசு பரிசீலனை நடத்தி வருகிறது.
மேலும் தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு உணவுகளை தடையின்றி வழங்குவதே சிறந்த உதவியாக இருக்கும்.
இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளும் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்த தமிழக முதல்வருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி-வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா-
Reviewed by Author
on
April 30, 2022
Rating:

No comments:
Post a Comment