மக்களை கொன்று அரசியல் செய்யாதே-மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கருப்பு பட்டி அணிந்து போராட்டம்.
இதன் போது சபை உறுப்பினர்கள் சபையில் கருப்பு பட்டி அணிந்து அரசுக்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசுக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-இரத்தவெறி பிடித்தவனே நாட்டை விட்டு வெளியேறு,மக்களை பட்டினிச்சாவில் தள்ளாதே,மக்களை கொன்று அரசியல் செய்யாதே,விவசாயத்தில் கை வைத்து நாட்டை அழிக்காதே,சொந்த மக்களை சுட்டுத் தள்ளாதே உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது
மக்களை கொன்று அரசியல் செய்யாதே-மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கருப்பு பட்டி அணிந்து போராட்டம்.
Reviewed by Author
on
April 21, 2022
Rating:
Reviewed by Author
on
April 21, 2022
Rating:










No comments:
Post a Comment