முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை இரண்டாவது நாளாகவும் முன்னெடுப்பு
இவ்வாறான நிலையிலேயே இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே அவர்களுடைய உணவான கஞ்சியின் வரலாற்றினை அல்லது அவர்களுக்கு அந்த காலப்பகுதியில் பசியாற்றிய இந்த கஞ்சியினை வரும் சந்ததியினருக்கும் தெரிவிக்கும் முகமாக தமிழின அழிப்பு வாரத்தின் ஆரம்ப நாளான நேற்றைய நாளில் இருந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்குவதற்கு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும் பொது அமைப்புகளும் இணைந்து வேலைத்திட்டமொன்றினை வடகிழக்கெங்கும் முன்னெடுக்கின்றனர்
அந்த வகையிலே இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை வளாகத்திற்கு அருகில் நேற்று ஆரம்பித்து வழங்கி வைக்கப்பட்டது
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும் இந்த கஞ்சி வழங்கும் திட்டமானது இன்று இரண்டாவது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை இரண்டாவது நாளாகவும் முன்னெடுப்பு
Reviewed by Author
on
May 13, 2022
Rating:

No comments:
Post a Comment