அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோர் தவறு தான்!

முதலில் பிறந்த குழந்தைக்கு பேச்சு வரவில்லையே, காது கேட்கவில்லையே என்றிருந்த நிலையில், அடுத்து பிறந்த இரட்டை குழந்தைகளும் வாய் பேசாமல் இருந்தால், காது கேட்காமல் போனால், அந்த பெற்றோரின் வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியுமா... விளக்குகிறார், பெங்களூரைச் சேர்ந்த சன்னி: மூன்று குழந்தைகளும் பிறந்த போது, தோற்றத்தில் குறையில்லாத குழந்தைகளை போலவே இருந்தன. முதல் குழந்தை பிரதீக் பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆன போது கூட, குறை இருப்பதாக எங்களுக்கு தோன்றவே இல்லை. மூன்று வயதாகியும் மகன் பேசவில்லை என்றதும், சென்னைக்கு அழைத்து வந்து, அடையாறில் இருக்கும் விசேஷ பள்ளியில் சேர்த்தேன். அந்தப் பள்ளியில் மற்றவர்கள் பேசும்போது, உதடுகள் அசைவதை வைத்து புரிந்து கொண்டு பேச கற்றுத் தருகின்றனர். அதைப் பார்த்து என் மனைவியும், மகனை எப்படி பேச வைப்பது என்று தெரிந்து கொண்டார்.

ஐந்தாம் வகுப்பு வரை மகன் அங்கு படித்து முடித்ததும், பெங்களூருக்கு அழைத்து வந்தேன். இனி குறையில்லா மாணவர்கள் படிக்கும் சாதாரண பள்ளியில் படித்தால் தான், மகனால் ஓரளவாவது, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும், ஓரளவுக்குப் பேசவும் முடியும் என்று நினைத்தேன். ஆனால், அத்தகைய பள்ளிகள் என் மகனைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. கெஞ்சிக் கூத்தாடி கடைசியில் ஒரு பள்ளியில் சேர்த்தோம். அது, அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம்.மகன் பிறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் மரியா, ஸாரா பிறந்தனர். அவர்களுக்கும் காது கேட்கவில்லை. நாங்களே பயிற்சி கொடுத்து, மகன் படித்த பள்ளியிலேயே சேர்த்தோம். மகள்களுக்கு நடனம், ஓவியம் வரைதல் போன்றவற்றை, என் மனைவி சொல்லித் தந்தார்.

மரியா 'சார்ட்டட் அக்கவுன்டன்சி' படிக்க, ஸாரா சட்டம் படித்தாள்.மகன், அமெரிக்காவில் எம்.எஸ்., முடித்து விட்டு டெக்ஸாசில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரிகிறான். கேலி, கிண்டல்களை தாண்டி என் பிள்ளைகள் சாதிக்கின்றனர்.நல்ல முறையில், எந்தக் குறைபாடும் இன்றி பிறந்த குழந்தைகளைப் பெற்ற அப்பா, அம்மாக்கள் பலர், தங்கள் குழந்தைகள் அப்படி இல்லையே, இப்படி இல்லையே என்று குறைபட்டுக் கொள்கின்றனர். அனைத்துக்கும், அந்த குழந்தைகளையே குற்றம் சொல்கின்றனர். உண்மையில், கடவுள் நல்ல குழந்தைகளைக் கொடுத்தும், அவர்களை நல்ல திறமைசாலிகளாக வளர்க்க தவறுவது பெற்றோர் தான்.


பெற்றோர் தவறு தான்! Reviewed by Author on May 01, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.