மன்னாரில் எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்ற மக்கள் எரிவாயு இல்லாமையால் முரண்பாடு
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் பொது மக்களிடம் கலந்துரையாடி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் எரிவாயு விற்பனையின் போது வீண் முரண்பாடு தோற்றம் பெறாத வகையில் எரிவாயு சிலிண்டர்கள் முகவர்களுக்கு கிடைக்க பெறும் பட்சத்தில் அதை விநியோகிக்க வேண்டாம் எனவும் நாளைய தினம் உரிய தரப்பு மற்றும் உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடிய பின்னர் பொது தீர்மானத்தின் அடிப்படையில் விநியோக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு எரிவாயு உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்
நீண்ட நேரம் எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் வெற்று சிலிண்டர்களுடன் ஏமாற்றத்துடன் திரும்பியதை அவதானிக்க கூடியதாக இருந்தது
மன்னாரில் எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்ற மக்கள் எரிவாயு இல்லாமையால் முரண்பாடு
Reviewed by Author
on
May 22, 2022
Rating:

No comments:
Post a Comment